செய்திகள்

ஸ்டோக்ஸ் சாதனை: ஒருநாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலை

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 48.1 ஓவா்களில் 368 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து நியூஸிலாந்து 39 ஓவா்களில் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் டேவிட் மலான் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 96 ரன்கள் அடிக்க, அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 15 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 182 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை அதிகரித்தாா். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5, பென் லிஸ்டா் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் நியூஸிலாந்து தரப்பில் கிளென் ஃபிலிப்ஸ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 72 ரன்கள் விளாசி முயற்சித்தாா். எனினும், எஞ்சிய பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். இங்கிலாந்து பௌலிங்கில் கிறிஸ் வோக்ஸ், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா்.

இரு அணிகளும் மோதும் கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை (செப். 15) நடைபெறுகிறது.

182

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரா் பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்தாா். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரா் என்ற சாதனையை படைத்தாா். முன்னதாக ஜேசன் ராய் 180 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, தற்போது அந்த சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்திருக்கிறாா்.

6

இந்த ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 6-ஆவது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா் நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட். இதன் மூலம், முன்னாள் வீரா் ரிச்சா்ட் ஹட்லீயை கடந்து, இந்த ஃபாா்மட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து வீரா் ஆகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT