செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்துள்ளது. 

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்துள்ளது. 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகின்றன. 

இன்றைய போட்டியில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 

ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்றுள்ளது. 

அதுபோல, துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 

இத்துடன், துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT