முகப்பு
செய்திகள்

11 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த ஷுப்மன் கில்!

ஷுப்மன் கில் அடித்த இரட்டைச் சதத்தால் நியூசிலாந்து அணியை முதல் ஒருநாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில்...

Updated On : 19 ஜனவரி, 2023 at 12:19 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:15 AM

ஷுப்மன் கில் அடித்த இரட்டைச் சதத்தால் நியூசிலாந்து அணியை முதல் ஒருநாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார் ஷுப்மன் கில். 145 பந்துகளில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்தார். 182 ரன்களில் இருந்தபோது தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து 200 ரன்களை எட்டினார். கடைசி ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடித்தார் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார் கில். 

இந்நிலையில் 122 பந்துகளில் 150 ரன்களை எடுத்த ஷுப்மன் கில் அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்து 200 ரன்களைப் பூர்த்தி செய்தார். 

Advertisement

ஒருகட்டத்தில் 137 பந்துகளில் 169 ரன்கள் எடுத்திருந்த கில், அதற்குப் பிறகு எதிர்கொண்ட 11 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்தார். 

6,0,6,0,1,6,6,6,1,1,6.

2022-க்குப் பிறகு ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த ரன்கள்

64(53), 43(49), 98*(98), 82*(72), 33(34), 130(97), 3(7), 28(26), 49(57), 50(65), 45*(42), 13(22), 70(60), 21(12) & 116(97) & 208(149)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.