இலங்கை அணி  படம் | ஐசிசி
செய்திகள்

2-வது டெஸ்ட்: வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இலங்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் தேவைப்படுகின்றன.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் தேவைப்படுகின்றன.

இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 531 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம், இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன்மூலம், வங்கதேசத்துக்கு 511 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற கடைசி நாளில் அந்த அணிக்கு 243 ரன்கள் தேவைப்படுகின்றன. இலங்கை வெற்றி பெற இன்னும் 3 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

மெஹிதி ஹாசன் மிராஸ் 44 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT