மயங்க் யாதவ்  படம் | ஐபிஎல்
செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் மயங்க் யாதவ் தேவையில்லையா? என்ன சொல்கிறார் ஷேன் வாட்சன்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவை விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்காது என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவை விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் லக்னௌ அணிக்காக சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மயங்க் யாதவை சீக்கிரமாக விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் ஜியோ சினிமாவில் பேசியதாவது: மயங்க் யாதவின் பந்துவீச்சு குறித்த பேச்சுகளை அதிகம் காண முடிகிறது. அவரது வேகப் பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரைப் போன்ற ஒரு வீரர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கிடைக்க அந்த அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். மிகப் பெரிய போட்டிகளில் அனுபவமிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மயங்க் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார்.

அவர் டெஸ்ட் போட்டிக்குத் தயாராக உள்ளாரா? அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை பார்ப்பது சிறப்பானது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளைக்கு 15-20 ஓவர்கள் வீச வேண்டும். வேகப் பந்துவீச்சாளராக இருப்பதனால், அவரது உடல் எந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. அதனால், மயங்க் யாதவை சீக்கிரமாக டெஸ்ட் போட்டிகளுக்கு கொண்டுவரத் தேவையில்லை என நினைக்கிறேன்.

மயங்க் யாதவ் அளவுக்கு பந்துவீச்சாளர்கள் பலரும் வேகமாக பந்துவீசுவதில்லை. அதனால், இந்திய அணி அவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்திக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். அவரை டெஸ்ட் போட்டிகளில் தற்போது அறிமுகம் செய்வது சிறந்த முடிவாக இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT