ரிஷப் பந்த்  படம் | ஐபிஎல்
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கு ரிஷப் பந்த் தயாரா? சௌரவ் கங்குலி பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ரிஷப் பந்த் தயாராக உள்ளாரா என்பது குறித்து சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ரிஷப் பந்த் தயாராக உள்ளாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படவுள்ளன. உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ரிஷப் பந்த் தயாராக உள்ளாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இன்னும் சில போட்டிகள் முடிவடையட்டும். ரிஷப் பந்த் நன்றாக விளையாடுகிறார். அவர் பேட்டிங் செய்வது, விளையாடுவது, கீப்பிங் செய்வது ஆகிய அனைத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது.

இன்னும் ஒரு வாரம் செல்லட்டும். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட ரிஷப் பந்த் தயாராக உள்ளாரா என்பது குறித்து உங்களுக்கு பதிலளிக்கிறேன். நான் கூறினால் மட்டும் போதாது. இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ரிஷப் பந்த்தை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதுதான் மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 152 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்துள்ளவர்களில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT