ரோஹித் சர்மா (கோப்புப்படம்)
ரோஹித் சர்மா (கோப்புப்படம்) 
செய்திகள்

2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

DIN

2027 ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

36 வயதாகும் ரோஹித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். இருப்பினும், 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதே சிறப்பானது என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே காணாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால், ஐசிசி கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவானது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உண்மையில் ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை. ஆனால், வாழ்க்கை உங்களை எங்கு கூட்டிச் செல்லும் என்பது தெரியாது.நான் நன்றாக விளையாடி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக் கோப்பையே உண்மையான உலகக் கோப்பை. 50 ஓவர் உலகக் கோப்பைகளைப் பார்த்து நாம் வளர்ந்தோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறுகிறது. கண்டிப்பாக அதற்கு நாங்கள் தகுதி பெறுவோம்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு முன்பு வரை நாங்கள் நன்றாக விளையாடினோம். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதும் என நினைத்தேன். இறுதிப்போட்டி எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. இறுதிபோட்டிக்கு முன்பு வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த நாள் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. இறுதிப்போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT