FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்

Updated On : 22 ஏப்ரல் 2024, 9:01 am IST
பகிர்:

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வென்று அசத்தியுள்ளார்.

உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவில் நடந்தது. டொரண்டோ நகரில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நகமுராவுடன் குகேஷ் மோதினார்.

நகமுராவுடன் மோதிய போட்டி டிரா ஆனதால் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று குகேஷ் சாம்பியன் ஆனார்.

Advertisement

Advertisement

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதேபோல் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு ஆனந்த் மஹிந்திரா, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments