இந்தியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள் படம் |AP
செய்திகள்

2-வது ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அபாரம்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, துனித் வெல்லாலகே 39 ரன்களும், குசல் மெண்டிஸ் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்திய அணி 97 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஷுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அக்‌ஷர் படேலைத் தவிர வேறு யாரும் நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவில்லை. விராட் கோலி (14 ரன்கள்), ஷிவம் துபே (0 ரன்), ஸ்ரேயாஸ் ஐயர் (7 ரன்கள்), கே.எல்.ராகுல் (0 ரன்), வாஷிங்டன் சுந்தர் (15 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்‌ஷர் படேல் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இலங்கை தரப்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT