படம் | AP
செய்திகள்

2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? உதவிப் பயிற்சியாளர் பதில்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் தோல்வி குறித்து அவர் பேசியதாவது: ஆச்சரியமாக இருந்தது. பந்து அதிகமாக ஸ்பின் ஆனது. முதல் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய பந்தில் ரன் குவிக்க முடிந்தது. ஆனால், ஆட்டத்தின் பிற்பகுதியில் பேட்டிங் செய்வது கடினமாக மாறியது. சில நேரங்களில் இதுபோன்ற கடினமான சூழல் உருவாகும். குறிப்பாக, 50 ஓவர் போட்டிகளில் இதுபோன்ற விஷயம் இருக்கும்.

எங்கு தவறு நடந்தது என்பதற்கு கவனம் கொடுத்து அதனை சரிசெய்ய வேண்டும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரிலேயே களமிறக்கப்பட்டார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசை மாறி களமிறங்கியதால் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்கள் யாரும் ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டம்

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT