படம் | பார்ல் ராயல்ஸ் (எக்ஸ்)
செய்திகள்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர்!

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் முதன் முதலாக இந்திய வீரர் ஒருவர் விளையாடவுள்ளார்.

DIN

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரராக தினேஷ் கார்த்திக் மாறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

39 வயதாகும் தினேஷ் கார்த்திக் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அதன்பின், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய சிறப்பான அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கிறது. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவானபோது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவதற்காக காத்திருக்கிறேன் என்றார்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் 180 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

SCROLL FOR NEXT