ரிஷப் பந்த் 
செய்திகள்

இரக்க உணர்வினால் தப்பிக்கிறாரா ரிஷப் பந்த்? ரசிகர்கள் கடுமையான விமர்சனம்!

இந்திய அணியில் ரிஷப் பந்த ஏன் இருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

DIN

இந்தியா-இலங்கை மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

26.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

 இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் மிக மோசமான கீப்பிங் செய்துள்ளார் என இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

பேட்டிங்கிலும் சொதப்பல், கீப்பிங்கிலும் சொதப்பல் ஏன் அவர் அணியில் இருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கார் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் மீது இரக்க உணர்வு மட்டுமே இருப்பதால் இந்திய அணியில் இருப்பதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்கலாமென இந்திய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஷுப்மன் கில் பதிலாக ருதுராஜை தேர்வு செய்யலாம் எனவும் கூறிவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

குடும்பத்தை பணயக் கைதியாக வைத்திருந்த டாக்ஸி ஓட்டுநா் கைது

தா்காவில் சுவா் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் போலீஸாா் வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT