செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அணிகள் விளையாடவுள்ள தொடர்கள் ஒரு பார்வை!

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக அந்த தொடரில் விளையாடும் 8 அணிகளும் எந்தெந்த அணிகளுக்கு எதிராக தொடர்களில் விளையாட உள்ளனர் என்பது தொடர்பாக...

DIN

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவுள்ள 8 அணிகளும் தங்களை அந்த தொடருக்காக தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை சாம்பியன்ஸ் டிராபிக்கு தயார் செய்துகொள்ள உள்ளன.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின், டிசம்பரில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கூறிய அனைத்து சுற்றுப்பயணமும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை உள்ளடக்கியது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி குறைந்தது 16 அல்லது 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஆப்கானிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி மிகக் குறைவான ஒருநாள் போட்டிகளிலேயே விளையாடவுள்ளது. டிசம்பரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா

அடுத்த மாதம் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகளில் என சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

வங்கதேசம்

வங்கதேசம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து

பாகிஸ்தான் அணியைப் போலவே நியூசிலாந்து அணியும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. நவம்பரில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் என வரிசையாக நியூசிலாந்து அணி ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளன.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வருகிற டிசம்பரில் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT