ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் சர்வதேச டி20 போட்டிகளில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். டி20 போட்டிகளில் ஓய்வினை அறிவித்தபோதிலும், அவர்கள் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக ரோஹித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகளும், விராட் கோலி 5 ஆண்டுகளும் விளையாடுவார்கள் என நம்புவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் ரோஹித் சர்மா தாரளமாக விளையாடலாம். விராட் கோலி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாடலாம். விராட் கோலி மிகுந்த உடல் உறுதியுடன் இருக்கிறார். அணியில் உள்ளவர்களிலேயே விராட் கோலிதான் மிகுந்த உடல் உறுதியுடன் இருப்பவர் என நினைக்கிறேன். 19 வயது இளைஞரைக் கூட விராட் கோலி உடல் உறுதியில் தோற்கடித்து விடுவார். அந்த அளவுக்கு அவர் உறுதியாக இருக்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.