முகப்பு
செய்திகள்

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற இலங்கை கேப்டன்!

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு வென்றுள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 2:21 PM
பகிர்:

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு வென்றுள்ளார்.

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஆகியோர் இடம்பெற்றனர்.

இவர்கள் மூவரில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்ற சமாரி அத்தப்பட்டு பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை 3-வது முறையாக வெல்வதை கௌரவமாக கருதுகிறேன். இந்த சாதனை எனது கடின உழைப்பாலும், சக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கொடுத்த ஆதரவினாலும் கிடைத்துள்ளது. இலங்கையிலும், உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாடும் வீராங்கனைகளுக்கு இதுபோன்ற அங்கீகாரம் கண்டிப்பாக நேர்மறையான தாக்கத்தை கொடுக்கும் என நம்புகிறேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →