படம் | ஐசிசி
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்!

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் பிரபல வேகப் பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் பிரபல வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் பிரபல வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

உள்ளூர் தொடரான தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடி வந்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ஸ்பென்சர் ஜான்சன் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 தொடர்களில் மிட்செல் ஸ்டார்க்குக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவரது இடத்தை ஸ்பென்சர் ஜான்சன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டு விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சீன் அப்பாட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் அணியில் உள்ளனர்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான தொடர் செப்டம்பர் 4 ஆம் தேதியும், இங்கிலாந்துக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11 ஆம் தேதியும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT