வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் 4-வது வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் 4-வது வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணியில் அப்துல்லா சஃபீக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். கேப்டன் ஷான் மசூத் 3-வது வீரராக களமிறங்குவார். பாபர் அசாம் 4-வது வீரராக களமிறங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக மட்டுமல்லாது பாபர் அசாம் கடந்த காலங்களில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அந்த தொடரில் பாபர் அசாம் 3-வது வீரராக களமிறங்கி விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பாபர் அசாம் 3-வது வீரராக களமிறங்கி விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.