ஸ்டீவ் ஸ்மித் படம் | ஐசிசி
செய்திகள்

டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசியது என்ன?

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளாக ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 91* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவது குறித்து வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ களமிறங்குவது குறித்து நான் கவலைப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது, புதிய பந்தினை எதிர்கொண்டு விளையாட வேண்டிய சவால் இருக்கும். புதிய பந்தில் ரன்கள் குவிப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT