செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும்  ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. 

பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸான் அவாய்ஷ் மற்றும் அராஃபாத் மின்ஹாஸ் தலா 52 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்டிரேக்கர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT