செய்திகள்

பேஸ்பால் ஆட்டத்தை ஜோ ரூட் கைவிட வேண்டும்: முன்னாள் கேப்டன் விமர்சனம்!

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்டை  விமர்சித்துள்ளார். 

DIN


இந்தியாவுக்கு எதிரான தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது இங்கிலாந்து அணி. பென் ஸ்டோக்ஸ் மெக்குல்லம் அணியினர் பேஸ்பால் என்ற தாக்கத்தை உலக கிரிக்கெட்டில் பேசு பொருளாக மாற்றியுள்ளார்கள். 

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்-இன் பேஸ்பால் பாணியை விமர்சித்து பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: 

முதல் பந்திலிருந்தே 5ஆவது கியரில் விளையாடுகிறார்கள். சிலர் அப்படி விளையாடுவது எனக்கு பிரச்னையில்லை. அதேமாதிரி விளையாடுவது சரியில்லை. ஜோ ரூட் இதை மறக்க வேண்டும். ஜோ ரூட் அவரது பாணியிலேயே விளையாடி 10,000 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பேஸ்பால் ஆட்டம் தேவையில்லை. 

இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தில் யாராவது ஒருவர் ஜோ ரூட்டிடம் ‘தயவுசெய்து உங்களது இயல்பிலேயே விளையாடுங்கள்’ எனக் கூற வேண்டும். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடும் ஜோ ரூட் இப்படி மோசமாக ஆடுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஸ்பின்னருக்கு எதிராக இங்கிலாந்து உருவாக்கிய சிறந்த பேட்டர்களில் ஒருவர் ரூட் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT