நீங்கள் லட்சத்தில் ஒருவர்: அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!
லட்சத்தில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த சாதனைக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: லட்சத்தில் ஒரு பந்துவீச்சாளராக விளங்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்குள் எப்போதும் ஒரு வின்னர் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது மிகப் பெரிய சாதனை. வாழ்த்துகள் சாம்பியன் எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.