செய்திகள்

ஜோ ரூட் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை: முகமது சிராஜ்

பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

DIN

ஜோ ரூட் இந்த ஷாட் விளையாடி ஆட்டமிழப்பார் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ரிவர்ஸ் ஷாட் விளையாடி ஆட்டமிழப்பார் என எதிர்பார்க்கவில்லை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் இன்னும் சிறிது நேரம் நீடித்திருந்தால், இந்தியாவுக்கு அது கடினமானதாக மாறியிருக்கும். ஆனால், திடீரென ஜோ ரூட் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தார். அவரது ஆட்டமிழப்பு எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது. ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: 3வது வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் யார்?

காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT