செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் முன்னேறிய இந்திய அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரில் முன்னிலை பெற்றதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 75 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 59.52 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 55 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவும் கடந்து போகும்...

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT