முகப்பு
செய்திகள்

2-வது டி20: ஆப்கானிஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவிப்பு.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 4:02 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (பிப்ரவரி 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய இலங்கை முதலில் பேட் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 51 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்த படியாக ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மேத்யூஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி மற்றும் அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளையும், ஃபரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.