செய்திகள்

பேஷ்பால் யுக்தியை கைவிடுங்கள் ஜோ ரூட்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அறிவுரை!

பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் .

DIN

பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவிக்க முடியால் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது அதிக ரன்களை குவிக்கக் கூடியவர். அவர் ஏன் அவரது இயல்பான ஆட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார் எனப் புரியவில்லை. முன்கூட்டியே திட்டமிட்ட ஷாட்டுகளைத் தான் விளையாட வேண்டும் என்பதை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்றார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி ஆட்டமிழந்ததை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT