ஷுப்மன் கில்லின் விக்கெட்டினை கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள் Vijay Verma
செய்திகள்

171க்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

DIN

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 104.5 ஓவரில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடும் இந்திய அணியில் ரோஹித் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் உடன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்து சிறிது பாட்னர்ஷிப்பினை அமைத்தார்கள். ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். படிதார் 17, ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 12 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

தற்போது துருவ் ஜுரேல் 6 ரன்களுடனும் அஸ்வின் ரன்னேதுமின்றி களத்தில் விளையாடி வருகிறார்கள். 54 ஓவர் முடிவில் இந்திய அணி 171க்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து சார்பாக ஷொயிஃப் பஷீர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா என்பதால் முனைப்புடன் விளையாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

பட்ஜெட் நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் மீண்டும் ’காளை’ ஆதிக்கம்!

SCROLL FOR NEXT