செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு ஓய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இருவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இருவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்களான ஷகீன் அஃப்ரிடி மற்றும்  இமாம் உல் ஹக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் சயீம் ஆயூப் மற்றும் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றமின்றி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT