செய்திகள்

கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள்: வார்னருக்கு சிறப்பு வரவேற்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிற பாகிஸ்தான் அணி 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் சார்பாக அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, ஆமிர் ஜமால் 82 , ஆஹா சல்மான் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மிட்செல் ஸ்ட்ராக் 2 விக்கெட்டுகளும் எடுத்தார். 

பாட் கம்மின்ஸ்

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்திருக்கையில் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஆஸி. 307 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

வார்னருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் பேட்டிங் ஆடும்போது சிறப்பு வரவேற்பினை இரண்டு அணியினரும் வழங்கினார்கள். 

தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT