செய்திகள்

ஓய்வு பெறும் டீன் எல்கருக்கு பரிசளித்த விராட் கோலி, ரோஹித் சர்மா!

ஓய்வு பெறும் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு இந்திய வீரர் விராட் கோலி ஜெர்சியை பரிசளித்துள்ளார். 

DIN

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பிறகு, அணியை சிறப்பாக வழிநடத்தி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தார் டீன் எல்கர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 185 ரன்கள் எடுத்த டீன் எல்கருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை டீன் எல்கர் வழிநடத்தினார். 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டீன் எல்கர் அறிவித்திருந்தார். 

2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வு பெறும் டீன் எல்கருக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்தார். ரோஹித் சர்மா இந்திய அணியினரின் கையெழுத்துகள் அடங்கிய டி ஷர்டினை பரிசளித்து கௌரவித்தார். 

86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள எல்கர் 5,347 ரன்களுடன் ஓய்வு பெறுகிறார். இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதும் அவருக்கே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இதனைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: இந்திய கம்யூ. செயலர் வீரபாண்டியன்

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

SCROLL FOR NEXT