செய்திகள்

இந்தியாவை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா!

இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

DIN

இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்திய அணி  118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டதாலும், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்ததாலும் ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் முன்னேறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் ஆஸ்திரேலியா (118 புள்ளிகள்), இந்தியா (117 புள்ளிகள்), இங்கிலாந்து (115 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (106 புள்ளிகள்) மற்றும்  நியூசிலாந்து (95  புள்ளிகள்)  அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT