செய்திகள்

முதல் டெஸ்ட்டின் தோல்விக்கு இதுதான் காரணம்: கே.எல்.ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது 100 சதவிகித திறனை வெளிப்படுத்தவில்லை என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது 100 சதவிகித திறனை வெளிப்படுத்தவில்லை என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும்  இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது 100 சதவிகித திறனை வெளிப்படுத்தவில்லை என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் டெஸ்ட் போட்டியின்போது நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் 100 சதவிகித திறனை வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். நாங்கள் போட்டிக்கு தயாராகவே இருந்தோம். ஆனால், வெற்றி பெறுவதற்கு தேவையான கூடுதல் திறனை வெளிப்படுத்ததாக உணர்கிறேன். தென்னாப்பிரிக்க அணி எங்களது நம்பிக்கையை உடைக்கும் விதமாக சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால், இரண்டாவது போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். எங்களது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். கடந்த 4-5 ஆண்டுகளாகவே நாங்கள் ஒரு அணியாக வெளிநாட்டுத் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தொடர்களையும் வென்றுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT