செய்திகள்

அர்ஜுனா விருது வென்ற முகமது ஷமிக்கு குவியும் வாழ்த்துகள்!

அர்ஜுனா விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

DIN

அர்ஜுனா விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அர்ஜுனா விருது பெற்ற முகமது ஷமிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இது மிகவும் மறக்க முடியாத தருணம் எனப் பதிவிட்டு ஷமி அர்ஜுனா விருதினைப் பெறும் விடியோவினை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களான விராட் கோலி, ஷிகர் தவான், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் முகமது ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்‌ஷ்மன், யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

அர்ஜுனா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT