செய்திகள்

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் முக்கிய வீரர்கள் இல்லை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20  போட்டி மொஹாலியில் இன்று (ஜனவரி 11) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்கிறது. 

இந்திய அணியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல சஞ்சு சாம்சன், ஆவேஷ்  கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது, ஷாராஃபுதீன் மற்றும் சலீம் சைஃபீ இன்றையப் போட்டியில் விளையாடவில்லை.

டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT