செய்திகள்

ஷிவம் துபே அரைசதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் முகமது நபி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்‌ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் ரன் அவுட்டானர். ஷுப்மன் கில் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் திலக் வர்மா மற்றும்  ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. இருப்பினும், திலக் வர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜிதேஷ் சர்மா 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினார். 

இறுதியில், 17.3 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஷிவம் துபே 60 ரன்களுடனும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20  தொடரில்  இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT