செய்திகள்

இந்திய அணியில் இடம்பிடித்த துருவ் ஜுரல்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குமார் சங்ககாரா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது பெருமையளிப்பதாக அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். 

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது பெருமையளிப்பதாக அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான துருவ் ஜுரல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக குமார் சங்ககாரா பேசியதாவது: எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பெருமை கொள்ளச் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வாகின்றனர். துருவ் ஜுரல் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் மிகச் சிறந்த வீரர். இந்த இடத்துக்கு முன்னேறுவதற்கு அவர் கடுமையாக உழைத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நெருக்கடியான சூழலில் இருந்தபோது சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து அணிக்கு ஜுரல் பலம் சேர்த்தார். குறுகிய வடிவிலான போட்டிகளில் துருவ் ஜுரல் ஆட்டத்தை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளில் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT