செய்திகள்

நாளை தொடங்குகிறது சர்வதேச லீக் டி20: டேவிட் வார்னர், அம்பத்தி ராயுடு உள்பட பலர் பங்கேற்பு!

டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20  தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (ஜனவரி 19) முதல் தொடங்குகிறது.

DIN

டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20  தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (ஜனவரி 19) முதல் தொடங்குகிறது.

கடந்த ஆண்டு முதல் முறையாக டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடர் நடத்தப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த சர்வதேச  லீக் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் துபை 15 போட்டிகளையும், அபு தாபி 11 போட்டிகளையும், ஷார்ஜா 8 போட்டிகளையும் நடத்தவுள்ளது. 

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற முக்கிய வீரர்கள் பங்குபெற்று விளையாடுகின்றனர். அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். டேவிட் வார்னர் துபை கேப்பிடல்ஸை கேப்டனாக வழிநடத்துகிறார். 

இந்த டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், கோரி ஆண்டர்சன், டிவைன் பிராவோ, தசுன் ஷானகா, ரஹ்மனுல்லா குர்பாஸ், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் கரண், ரோவ்மன் பௌவல், ஷிம்ரன் ஹெட்மேயர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்டின் கப்டில் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT