செய்திகள்

சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!

சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் மறுமணம் செய்துள்ளார்.

DIN

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இரண்டு பேரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு  இஷான் என்ற மகன் உள்ளார். 

சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளான சானியா - சோயிப்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை. 

இதற்கிடையே, இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தைத் மறுமணம் செய்துள்ளார். அதிகாரப்பூர்வமாக சானியா மிர்சாவின் விவாகரத்து விசயம் வெளியே தெரிவதற்கு முன் இத்திருமணம் நிகழ்ந்துள்ளதால் சானியா மிர்சாவை,  சோயிப் மாலிக் தலாக் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT