செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் உஸ்மான் கவாஜா விளையாடுவாரா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜாவுக்கு அடிபட்டது. மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் வீசிய பந்தை எதிர்கொண்டபோது பந்து கவாஜாவின் தாடையில் பட்டது. இதில், அவருக்கும் சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: உஸ்மான் கவாஜாவுக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்தன. அவருக்கு தாமதமாக ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனித்து வருகிறோம். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக நாளை அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கவாஜா விளையாடத் தயாராக இருக்கும்பட்சத்தில், முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே 11 பேர் கொண்ட அணியே இரண்டாவது டெஸ்ட்டிலும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT