விராட் கோலி 
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விராட் கோலி விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக இங்கிலாந்து அணி அபு தாபியில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்தியில், “சொந்த காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் இருந்து மட்டும் விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளர். மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், விராட் கோலிக்கு மாற்று வீரர் விரைவில் ஆடவர் அணி தேர்வுக் குழுவால் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT