செய்திகள்

இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் சேர்ப்பு!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், நாளை (ஜனவரி 24) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20  போட்டிகளில் நடுவரிசை ஆட்டக்காரர்களில் அதிரடியாக விளையாடக் கூடிய வீரராக ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 மற்றும் 38 ரன்கள் முறையே எடுத்தார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ரிங்கு சிங் 44 முதல் தர போட்டிகளில் விளையாடி 3,109 ரன்கள் குவித்துள்ளார். தற்போது அவர் இந்தியா ஏ அணியில் விளையாடவுள்ளார். 

இந்தியா ஏ அணி விவரம்

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார், அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, உபேந்திர யாதவ், ஆகாஷ் தீப், யஸ் தயாள் மற்றும் ரிங்கு சிங். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT