செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.  

DIN

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.  

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இன்றையப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் ஷேன் வார்னே, கிளன் மெக்ராத், நாதன் லயன் மற்றும் டிகே லில்லி ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 27-வது வீரர் மிட்செல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT