முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு இன்று கடினமான நாள்: உதவிப் பயிற்சியாளர்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இன்று கடினமான நாளாக இருந்ததாக அந்த அணியின்  உதவிப் பயிற்சியாளர் ஜீதன் படேல் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இன்று கடினமான நாளாக இருந்ததாக அந்த அணியின்  உதவிப் பயிற்சியாளர் ஜீதன் படேல் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தைக் காட்டிலும்  இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இன்று கடினமான நாளாக  இருந்ததாக அந்த அணியின்  உதவிப் பயிற்சியாளர் ஜீதன் படேல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இது கடினமான நாளாக இருந்தது. இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமானது. அவர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தினர். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடுவது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. இங்கிலாந்து அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளார்களுடன் இணைந்து ஜோ ரூட் சிறப்பாக பந்துவீசினார். அவர் சில வாய்ப்புகளை உருவாக்கினார். ஜாக் லீச்சும் சிறப்பாக பந்துவீசினார் என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →