செய்திகள்

 ஆஸி. ஓபன்: வரலாறு படைத்த  போபண்ணா 

DIN

ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் போபண்ணா-எப்தென்  இணை சாம்பியன் பட்டம் வென்றது. 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை, இத்தாலியின் போலேல்லி-அண்ட்ரியா வாவசோரி இணையை எதிர்கொண்டது. 

சுமார் 1 மணிநேரம் 39 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்  7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா-எப்தென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. 43 வயதாகும் ரோஹன் போபண்ணா அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார். 

2017ல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT