நான் கேப்டனான பிறகு இங்கிலாந்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி; பென் ஸ்டோக்ஸ் பெருமிதம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த மகத்தான வெற்றி என அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த மகத்தான வெற்றி என அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: 2-வது டெஸ்ட்டிலிருந்து விலகிய இரண்டு முக்கிய வீரர்கள்; முடிவுக்கு வந்த சர்ஃபராஸ் கானின் நீண்ட கால காத்திருப்பு!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அணிக்கு பல சிறப்பான மறக்க முடியாத தருணங்கள் உருவாகின. சிறப்பான வெற்றிகளை பெற்றோம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றி நான் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தற்போது வரை உள்ள போட்டிகளில் கிடைத்திருக்கும் வெற்றிகளிலேயே மிகவும் மகத்தான வெற்றி. ஆலி போப் சிறப்பாக விளையாடினார். அவர் ஸ்வீப் ஷாட்டுகளை சிறப்பாக விளையாடினார். இந்திய துணைக் கண்டத்தில் இங்கிலாந்து வீரர் ஒருவர் விளையாடிய சிறப்பான ஆட்டம் என்று இதனைக் கூறலாம் என்றார்.