செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்துக்கு சறுக்கிய இந்திய அணி!

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் 5-வது இடத்துக்கு  சறுக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய அணி 54.16 சதவிகித புள்ளிகளில் இருந்து 43.33 சதவிகித புள்ளிகளாக குறைந்தது. இந்த தரவரிசையில் 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 50 சதவிகித புள்ளிகளுடன் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT