முகப்பு
செய்திகள்

ஃபபியானோ கருணாவின் வெற்றியை தடுத்து நிறுத்திய குகேஷ்; பிரக்ஞானந்தா 2ஆம் இடம் தக்கவைப்பு!

சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 7ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா இயன் நெபோம்னியச்சியுடன் டிரா செய்தார்.

Updated On : 4 ஜூலை, 2024 at 12:12 PM
குகேஷ், பிரக்ஞானந்தா. - படங்கள்: கிராண்ட் செஸ் டூர் / எக்ஸ்
பகிர்:
Updated On : 4 ஜூலை, 2024 at 11:44 AM

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 7ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா இயன் நெபோம்னியச்சியுடன் டிரா செய்தார். மேலும் மற்றுமொரு இந்தியரான குகேஷ் ஃபபியானோ கருணாவுடன் டிரா செய்தார்.

இதனால் ஃபபியானோ கருணா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இன்னும் புள்ளிகளை அதிகரிக்கவிடாமல் குகேஷ் தடுத்தி நிறுத்தியுள்ளார். இதனால்2 ஆம் இடத்தினை குகேஷ், பிரக்ஞானந்தா உடன் பிரான்ஸின் ஃபிரெஸோ அலிரெஸாவும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மீதமுள்ள 2 சுற்றுகளில் யார் வெற்றி பெருகிறார்களோ அவர்களுக்கு முதலிடம் கிடைக்கும். 2ஆம் இடத்தில் உள்ள மூவர் உள்பட 4 பேருக்கும் முதலிடம் பிடிக்க அதிகமான வாய்ப்பிருக்கின்றன.

Advertisement

7ஆம் சுற்று முடிவில் புள்ளி பட்டியல்:

ஃபபியானோ கருணா 4.5 புள்ளிகள்

ஃபிரெஸோ அலிரெஸா - 4.0 புள்ளிகள்

ஆர். பிரக்ஞானந்தா - 4.0 புள்ளிகள்

குகேஷ் 4.0 புள்ளிகள்

இயான் நெபோம்னியச்சி - 3.5 புள்ளிகள்

மேக்ஸிம் வச்சியர் - 3.5புள்ளிகள்

Updated On : 4 ஜூலை, 2024 at 12:10 PM

பிரக்ஞானந்தா டிராவுக்குப் பிறகு ரசிகர்களுக்கு தனது ஆட்டோகிராபினை (கையொப்பம்) அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.