படம் | பிசிசிஐ
செய்திகள்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாட போவதில்லையா?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடவுள்ளதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் எப்போதும் இடம்பெறுவார்கள். ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முன்னதாக நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்கள் பயிற்சிபெற போதுமானதாக இருக்கும். அடுத்த சில மாதங்களுக்கு அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளார்கள். செப்டம்பர் - ஜனவரி இடைவெளியில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மற்றும் ஜனவரி மாத இடைவெளியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், இந்திய அணியை ஹார்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

SCROLL FOR NEXT