இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
குருவான யுவ்ராஜ் சிங் தன்னை நினைத்து பெருமைப்படுவார் என அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தார்.
பின்னர் யுவ்ராஜ் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்படி எல்லாம் அபிஷேக் சர்மாவுக்கு பயிற்சி வழங்கப்பட்டது என்பதை விடியோவாக வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள விடியோவில், “ரோம் நகரம் ஒரே நாளில் உருவாகவில்லை. உனது முதல் சர்வதேச சதத்துக்கு வாழ்த்துகள் அபிஷேக்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது இணையத்தில் வைரலாகி வருகிறது. குருவை விஞ்சிய சிஷ்யன் என பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.