ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐயைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் இந்திய அணியில் 15 பேருக்கும் தலா ரூ.5 கோடியும் ரிசர்வ் வீரர்களான நால்வருக்கும் தலா ஒரு கோடியும் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.2.5 கோடியும் 5 பேர்கொண்ட தேர்வுக்குழு தலைவர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடியாக பரிசுத்தொகயை உயர்த்தி வழங்கப்பட இருக்கும்போது டிராவிட், “மற்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2.5 கோடியே போதுமானது” எனக் கூறியுள்ளார்.
தற்போது இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.