ரோஹித் சர்மா படம் | பிசிசிஐ
செய்திகள்

ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து மனம் திறந்த மிட்செல் ஸ்டார்க்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 41 பந்துகளில் அதிரடியாக 92 ரன்கள் குவித்தார். மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு ஃபோர் அடித்து 29 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசியது குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார்.

மிட்செல் ஸ்டார்க்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடியுள்ளேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பான அமைந்தது. அதிலும் குறிப்பாக, உலகக் கோப்பைத் தொடரின் பிற்பகுதி அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. செயிண்ட் லூசியா மைதானத்தில் காற்று வீசும் திசையை அவர் குறிவைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஏனெனில், அந்த முனையிலிருந்து பந்துவீசும்போது மட்டுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்டது. ரோஹித் சர்மாவுக்கு 5 மோசமான பந்துகளை வீசினேன் என நினைக்கிறேன். அவை அனைத்தையும் அவர் சிக்ஸருக்கு விளாசிவிட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT